கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை நாளைக்குள் புயலாக உருவெடுக்கும். அதன் பிறகு 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை காலை வடக்கு வங்க கடற்கரை பகுதியை அடையும். அன்று மாலையில் வடக்கு ஒடிசா, வங்கதேசம் இடையே மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி மே 26-ஆம் தேதி யாஸ் புயல் கரையை கடக்கும். அதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories