Categories
மாநில செய்திகள்

வரும் 28ஆம் தேதிக்குள்…. தமிழக ஆசிரியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு… பள்ளிகல்வித்துறை புதிய அதிரடி….!!!

பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிரபித்துள்ளது.

கொரோனா தொற்று  காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையான ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்பொழுது தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜனவரி மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்கள் வரும் 28-ம் தேதி பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். மேலும் அனைவரும் புதிய இடங்களில் வரும் மார்ச் 1-ம் தேதி பணியில் சேர வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |