இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் ரயில்களில் மட்டுமல்லாமல் விமானங்களிலும் செல்வதற்கு IRCTC பல பயணத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கது, சென்னையிலிருந்து கோதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி, ரிஷிகேஷ் ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு விமான சுற்றுலா செல்வதற்கு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற ஜூன் 29-ஆம் தேதி புறப்படும் சுற்றுலா விமானத்தில் 13 நாட்கள் பயணித்து இந்த இடங்களை எல்லாம் ஆன்மீக அன்பர்கள் கண்டு மகிழலாம். இதற்கான கட்டணம் ரூ.49,500 ஆகும். அதனைப் போலவே சென்னையில் இருந்து ஜூலை 28 ஆம் தேதி புறப்படும் மற்றொரு விமான சுற்றுலாவில் அமர்நாத் பனி லிங்கம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியும். இந்த நான்கு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கான பயண கட்டணம் ரூ.53,800. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 90031 40682, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது