Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரும் 29 ஆம் தேதி முதல்…. படகுகள் மூலம் கொசு மருந்து…. மாநகராட்சி வெளியிட்ட தகவல்….!!!!

சென்னை மாநகராட்சியின் சார்பாக மழைக் காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித் தடங்கள், மழைநீர் வடிகால்கள், வீடுகள்தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை ஒழிக்கும் பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்கும் விதமாக தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் 1,262 நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அத்துடன் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பேரயர்கள், பேட்டரி வாயிலாக இயங்கும் 300 ஸ்பேயர்கள், 220 கையினால் இயங்கும் புகைப் பரப்பும் எந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் எந்திரங்கள் மற்றும் 66 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம் பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், கூவம்ஆறு, அடையாறு போன்ற நீர்வழித் தடங்களில் மண்டலத்திற்கு 2 படகுகள் வீதம் 10 படகுகள் வாயிலாக கொசுமருந்து தெளிக்கும் பணியானது வரும் 29-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அத்துடன் மாநகராட்சிக்கு உட்பட்ட மழை நீர் வடிகால்களிலும் இந்த பணியானது நடந்து வருகிறது. இந்த தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |