Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் 30ம் தேதி நேரில் ஆஜராக…. எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சம்மன்…!!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான
7 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி கரூரில் உள்ள எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள வீடு என 27 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வரும் 30ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |