Categories
தேசிய செய்திகள்

வரும் 30-ஆம் தேதி… மேற்கு வங்கத்தில் முதல் வந்தே பாரத் ரயில்… தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!!

மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா- நியூ ஜல்பைகுரி இடையான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இந்தியாவில் தயாரிப்போம்  திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத் இயக்கப்பட இருக்கிறது”. இந்த ரயிலை வருகிற 30-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் சேவை ஹௌரா – நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்பட உள்ளது. வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும் எனவும் இதற்கான 16 பெட்டிகளும் ஏற்கனவே கிழக்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட விட்டது எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தில்லி – வாரணாசி, தில்லி- ஜம்மு, மும்பை- காந்திநகர், சென்னை- மைசூர், என ஆறு வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஏழாவதாக மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Categories

Tech |