Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரும் 31 ஆம் தேதி கோவையில் பந்த்….. வெளியான முக்கிய தகவல்…..!!!!

கோவை உக்கடம் பகுதியில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து ஏற்பட்டது. இது சிலிண்டர் விபத்து என்று காவல்துறையினர் கூறினார்கள். அதை பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதன்முதலில் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீடு மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகளில் வெடி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் மூலமாக கோவையில் நடக்க இருந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி ஏற்படாமல் இருப்பதோடு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் 31ஆம் தேதி கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அண்ணாமலை முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |