Categories
மாநில செய்திகள்

வரும் 7-ஆம் தேதி முதல்…. தமிழகத்தில் கடைகள் திறப்பு…? – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இருப்பினும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் வரும் ஜூன் 7-ஆம் தேதி காலை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |