Categories
மாநில செய்திகள்

வரும் 7-ம் தேதி முதல் இந்த ரயில் சேவைகளில்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா தொற்று பொது முடக்கத்தின் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து கொரோனா இரண்டாவது அலையின் தாக்கமானது படிப்படியாக குறைந்து வந்துள்ளதால் தெற்கு ரயில்வே ரயில் சேவைகளை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி மதுரை-ராமேஸ்வரம் இடையே வருகின்ற 7 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் செயல்பட இருக்கிறது. ராமேஸ்வரத்திலிருந்து காலை 05.04 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது காலை 9.30 மணி அளவில் மதுரையை வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனையடுத்து கோவை மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் தினந்தோறும் இயக்கப்படும். இரவு 12.30 மணியளவில் கோவையில் இருந்து புறப்பட்டு ரயில் காலை 7.40 மணிக்கு மன்னார்குடி வந்து சேரும். எதிர்திசையில் மன்னார்குடியிலிருந்து தினமும் இரவு 08.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது காலை 4.45 மணியளவில் கோவையை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |