Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வரும்7 ஆம் தேதிக்குள்…. சம்பளம் கிடையாது…. சற்றுமுன் மின் வாரிய ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு..!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கிடையில்  ஓமைக்ரான் வைரஸ் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக போட்டு கொண்ட பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் ,கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |