அமைச்சருக்கு போஸ்டர் ஒட்டி நூதன முறையில் வரவேற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தற்போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார். இவர் நன்றி செலுத்தும் விதமாக பொதுமக்களுக்கு வடை சுடும் சட்டி வழங்குகிறார். இந்நிலையில் பாளையம்பட்டி விரிவாக்க பகுதி முழுவதுமாக வருவாய்த்துறை அமைச்சரை வரவேற்கும் வகையில் பா.ஜ.க ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளது.
அந்த போஸ்டரை பார்த்து தி.மு.க கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது போஸ்டரில் எழுதியிருப்பதாவது, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லாத வருவாய்த்துறை அமைச்சர் வாக்காளர்களுக்கு வடை சட்டி வழங்கி வந்தனம் செய்கிறார். அன்னாரின் வருகையை பாரதிய ஜனதா கட்சி வாழ்த்தி வரவேற்கிறது. இவன் பாரதிய ஜனதா கட்சி, விருதுநகர் கிழக்கு மாவட்டம் என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் வருவாய்த்துறை அமைச்சர் செல்லும் இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.