கிளார்க்கை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு நிலவியது.
தேனி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்து நல்லூர் பஞ்சாயத்து உள்ளது. இங்கு கிளார்க்காக பணிபுரிபவர் பஞ்சாயத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரை கண்டித்து அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தலைவர் சிம்சன், துணைத்தலைவர் லட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.