Categories
மாநில செய்திகள்

வருவாய் ஈட்டுவதில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. பாராட்டிய முதன்மை அஞ்சல்துறை தலைவர்…!!

தென்மாநிலங்களில் வருவாய் ஈட்டுவதில் தமிழக அஞ்சல் துறை முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் தென் மண்டல அஞ்சல் துறையில் சிறப்பான முறையில் பணியாற்றியவர்களுக்கு விருதினை வழங்கும் விழாவானது, அதன் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் ரவீந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அதன்பின் சென்னை முதன்மை அஞ்சல் துறை தலைவர் செல்வகுமார் விருதுகளை வழங்கி கூறியதாவது, தென்மாநில அஞ்சல் துறைகளில் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஈட்டும் வருவாயை விட தமிழகம், அஞ்சல் துறையில் அதிக வருவாய் ஈட்டி முன்னணியில் உள்ளதாக   கூறினார்.

மேலும் பேசிய அவர், ஊழியர்கள் பலர் உயிர் இறந்தாலும் தடையின்றி பணிகள் நடந்துள்ளது. தபால் அலுவலகங்களில் 2ஆண்டுகளில் மட்டும்  10 லட்சம் பேர் ஆதார் சேவையில் பயன் அடைந்துள்ளதாக தெரிவித்தார். அதன் பிறகு பேசிய தலைவர் நடராஜன், தென் மண்டலத்தில் ஆதார் சேவையில் 2 லட்சம் பேர் இரண்டு ஆண்டுகளில் பயனடைந்துள்ளதாகவும் மேலும் இந்த ஆண்டு மட்டும் 30 ஆயிரம் பேர் பாஸ்போர்ட் எடுக்கும் பணியானது நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து 6 லட்சம் பேர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும்  புவிசார் குறியீடு பெற்ற 16 பொருட்கள் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது என்றார். இந்த விழாவில் 11 மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முதல்  கிராம தபால் ஊழியர் வரை மொத்தம் 70 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக  உதவி இயக்குனர் கலைவாணி நன்றி கூறி முடித்துள்ளார்.

Categories

Tech |