தமிழக அரசு சட்ட ஆலோசனை குழு ஒன்றை ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பு, வருவாய் குறித்து ஆராய நியமித்துள்ளது. இதுகுறித்து நேற்று மாநில அரசின் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட வருவாய் மற்றும் வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட சட்ட, பொருளாதார வல்லுனர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் சட்ட ஆலோசனை குழு ஒன்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி.டட்டார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜி.நடராஜன், கி.வைத்தீஸ்வரன், குறுந்தொழிற்சாலைகள் அமைப்பின் தலைவர் கே.வேல்முருகன், டிசிஎஸ் சேவை பிரிவின் மண்டல தலைவர் சுரேஷ் ராமன் ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.