அஞ்சலகங்களில் வருடத்திற்கு 399 ரூபாய் செலுத்தினால் பத்து லட்சம் விபத்து காப்பீடு பெரும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமஸ் வங்கியின் மூலம் வருடத்திற்கு ரூபாய் 399 மட்டும் செலுத்தினால் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். இத்திட்டத்தின் மூலமாக விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் உள்ளிட்டவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ஒரு லட்சம் வரை வழங்கப்படும்.
மருத்துவமனையை அனுமதிக்கப்படும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 1000 வீதம் பத்து நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் நோயாளிகளை பார்க்க வரும் குடும்பத்தினரின் பயண செலவுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். உயிரிழந்து விட்டால் ஈமக்கிரியைகள் செய்வதற்கு ரூபாய் 5000 வழங்கப்படும். வருடத்திற்கு வெறும் 399 ரூபாய் செலுத்தினால் இந்த காப்பீட்டு திட்டம் மூலம் நிதி உதவி பெற முடியும். இத்தகவலை இராமநாதபுரம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சித்ரா தெரிவித்திருக்கின்றார்.