சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இதையடுத்து கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டறிவதற்கு பிசிஆர் சோதனை மூலமாக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் சீனாவில் ஆசனவாய் மூலமாக கொரோனா பரிசோதனை செய்து துல்லியமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பலரும் முன்வரவில்லை.
இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருபவர்கள் அனைவருமே ஆசனவாய் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் சீனா தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளாமல் விமானநிலையங்களில் ஆசனவாய் பரிசோதனை மையங்களை அமைக்க்க உள்ளது. இதனால் சீனாவுக்கு செல்ல இருப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.