இந்தியாவில், பொருளாதாரச் சிக்கல்களால், திறமையான குழந்தைகள் கூட கல்வி கற்கும் வாய்ப்பை தவற விடுகிறார்கள். கிராமங்களில் பெண் குழந்தைகள் அதிகம் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதற்காக மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பெண்கள் பணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.
பாலிகா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் இலவசமாக படிக்கலாம். படிப்புக்காக ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு பெண் 18 வயது வரை இலவசக் கல்வி பெறலாம். பாலிகா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 15 ஆகஸ்ட் 1997க்குப் பிறகு பிறந்த பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.