போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு இந்திய தூதர் உதவி பொருட்களை வழங்கியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து 6 மாதமாக ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின் நாட்டு மக்களின் தேவைக்காக 7 ஆயிரத்து 725 கிலோ மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உக்ரைன் சுகாதார துறை துணை மந்திரி ஓலெக்கி யரெமென்கோவிடம் வழங்கியுள்ளார்.
மேலும் உக்ரைன் நாட்டு மக்களுக்காக இந்தியா மனிதநேயம் அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உதவிகளை அனுப்பி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய முதலில் இருந்து பகைமைகளை மறைந்து போரை கைவிட்டு வன்முறைக்கு முடிவு ஏற்படுத்தும் படி இந்தியா தொடர்ந்து இரு நாட்டிற்கும் அழைப்பு விடுத்து வருகிறது. மேலும் இரு நாட்டு தலைவர்களும் தூதரக மற்றும் பேச்சுவார்த்தை வழிக்கு திரும்ப வேண்டும். மேலும் இந்தியா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் துணை நிற்போம் என தெரிவித்துள்ளது.