Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வறுமையில் வாடும் விளையாட்டு வீரர்களுக்கு… கலெக்டர் சொன்ன குட் நியூஸ்..!!

நலிந்த, ஆதரவற்ற நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.மோகன்  அறிவித்துள்ளார்.

விழுப்புரம் கலெக்டர் டி. மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுகொண்டு பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் தற்சமயம் நலிந்து, ஆதரவற்று வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் நலனுக்காக “பண்டிட் தீனதயாள் உபாத்தியா” தேசிய நல நிதி திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், வறுமையில் வாடும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள் அனைவரும் இதற்கான விபரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் 74017 03485 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |