Categories
உலக செய்திகள்

வறுமையில் வாடும் 7 மில்லியன் மக்கள்… அபராதம் செலுத்தாமல் காப்பாற்ற…. அரசு செய்த உதவி…!!

பிரான்சில் வறுமையில் உள்ள 7 மில்லியன் மக்களுக்கு முகக்கவசங்களை அரசு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு முக்கிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையில் முதல் நடவடிக்கையாக, வருகின்ற வாரம் முதல் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அப்படி தவறினால் 135 யூரோ வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணத்தால் மக்கள் அனைவரும் கடும் பொருளாதார வறுமையில் இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் இந்த விதியானது அமல்படுத்தப்பட்டால் வறுமையில் உள்ள மக்களுடைய நிலை என்னவாகும்? எனவே மக்களின் வறுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசே இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டிலுள்ள ஏழு மில்லியன் வறுமையில் உள்ள மக்களுக்குதுவைக்க க்கூடிய முகக்கவசத்தினை இலவசமாக அளிப்பதாக சுகாதார அமைச்சர் Olivier Veran அறிவித்திருக்கின்றார். மேலும் வறுமையில் இருக்கின்ற மக்களுக்கு உரிமையான சுகாதார காப்பீடான complementaire sante solidaire பெறுகின்ற 7 மில்லியன் மக்களுக்கு முககவசம் இலவசமாக அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதனைப்பற்றி சுகாதார அமைச்சர் கூறும்போது, நாங்கள் பொதுமக்களுக்காக 40 மில்லியன் துவைக்கக்கூடிய முக கவசங்களை வழங்கப்போகிறோம்.  இதனை 30 முறை பயன்படுத்த இயலும். இந்த முடிவு வறுமைக்கோட்டில் இருக்கின்ற 7 மில்லியன் பிரான்ஸ் மக்களுக்காக எடுக்கப்பட்டது. இதனை complementaire sante solidaire பயனாளிகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |