தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக சிறுமி செய்த செயல் தமிழக மக்களை கண்கலங்க செய்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை படித்து வரும் மாணவ மாணவிகளில் பலர், தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரடங்கில் வேலைக்கு சென்று வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதை உணர்ந்து ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தேனீர் விற்று வருகிறார். அவர் தனது தாய்க்காகவும் , தங்கைக்காகவும் இந்த வேலையை கஷ்டமாக கருதாமல் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ஒரு பெண் குழந்தை இப்படி ஒரு ஊரடங்கு காலத்தில் வெளியே சென்று தேனீர் விற்று வருவது தாய்க்கு அச்சத்தை ஏற்படுத்தியதால் அவரது பாதுகாப்பை கருதி, முடியை வெட்டி அவரை சிறுவன் போல் சித்தரித்து, சிறுவருக்கான சட்டை பேண்ட் உள்ளிட்டவற்றை அணியச் செய்து தேனீர் விற்று வருமாறு அறிவுறுத்தியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என்பது வறுமையை விட கொடுமையான ஒன்றாக கருதப்படுகிறது.