Categories
உலகசெய்திகள்

வறுமை குறியீடு அட்டவணை வெளியீடு… “இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்”… ஐநா பாராட்டு…!!!!

இந்தியாவில் 2005 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரையிலான 15 வருடங்களில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு இருக்கின்றனர். ஆனாலும் உலகிலேயே அதிக ஏழை மக்களை கொண்ட முதல் நாடாக இந்தியா இருப்பதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐநா நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஓபிஎஸ்ஐ ஆகியவற்றின் சார்பில் பல பரிமாண வறுமை குறியீடு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 2005 – 2006 வருடம் முதல் 2019  – 2021 ஆம் வருடம் வரையிலான 15 ஆண்டு காலத்தில் இந்தியாவில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு இருக்கின்றார்கள் இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.

இதனை அடுத்து இந்தியாவின் 2020 ஆம் வருடம் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் உலக அளவில் அதிக ஏழை மக்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் 22.89 கோடி ஏழை மக்கள் இருக்கின்றார்கள் இதனை தொடர்ந்து 9.67 கோடி ஏழை மக்களுடன் நைஜீரியா அடுத்த இடத்தில் இருக்கிறது வறுமை குறைந்து இருந்தாலும் உலகில் இன்னும் அதிக ஏழை குழந்தைகளைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கின்றது. மேலும் 2019 ஆம் வருடத்தின்படி இந்தியாவில் இன்னும் 9.7 கோடி ஏழை சிறுவர்கள் இருக்கின்றார்கள். இது பல பரிணாம வறுமை குறியீட்டின் கீழ் உலகளாவிய அளவில் வேறு எந்த நாட்டிலும் உள்ள மொத்த ஏழைகள் சிறுவர்கள் பெரியவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |