Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனவால் வறுமை பிடியில் நடிகை ….. ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார் …!!

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்ததால் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகமும், நாமும் அடுக்கடுக்கான சவால்களை நாள்தோரும் சந்தித்து வருகிறோம். கேரளாவில் உள்ள மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்வாதாரத்தையும் இந்த கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. நடிகை மஞ்சுவுக்கு கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்கள் தான் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. அவரின் சேமிப்பையும் மற்றும் கேரள மக்களின் கலைக்கழகத்திடமும் கடன் வாங்கி ஒரு ஆட்டோவை வாங்கினார். அந்த ஆட்டோ அவர் நாடகம் நடத்திவிட்டு வீட்டிற்கு  திரும்புவதில் வழித்துணையாக மாறிப்போனது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாதக்கணக்கில் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மேடை நாடகங்கள் அரங்கேற்றம் நடைபெறபெறுவதில் வழி இல்லாமல் போனது. இதனால் அவர் கையில் இருக்கிற ஆட்டோவையே வாழ்வாதாரமாக  மாற்றினார். இப்போது , அவர் ஆட்டோ ஓட்டி தனது வாழ்வாதாரத்தில்  ஈடுபட்டு வருகிறார். கொரோனாவால் வீட்டினுள் முடங்கி விடாமல் அவர் நெஞ்சில் துணியுடன் ஆட்டோவை  ஓட்டி வாழ்வில் புதிய வழியை போட்டுள்ள நடிகை மஞ்சுவை அந்தப் பகுதியில் இதோர் பாராட்டை பெற்றுவருகிறார்.

Categories

Tech |