Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வலிக்காக மண்ணெண்ணெய் தேய்த்த நபர்…. உடல் கருகி இறந்த கொத்தனார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடலில் தீப்பிடித்து எரிந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் கொத்தனாரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த சேகர் உடல் வலிக்காக கை, கால்களில் மண்ணெண்ணெய் தேய்த்துக்கொண்டு அமர்ந்துள்ளார். இந்நிலையில் பீடி பற்ற வைக்கும் போது எதிர்பாராத விதமாக சேகரின் உடலில் தீப்பொறி விழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனால் அலறி துடித்த சேகரை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |