Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலிபர்களுக்குள் ஏற்பட்ட மோதல்…. கலவரத்தில் முடிந்ததால் பரபரப்பு…. ஏராளமான போலீஸ் குவிப்பு….!!

2 தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் அப்பகுதி உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திடீரென அந்த வாலிபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை விலக்கி விட்டு வாலிபர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள் அவரது தரப்பினரை அழைத்துக்கொண்டு கோகிலாபுரத்திற்கு சென்று மீண்டும் அந்த வாலிபர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

இதனையறிந்த 2 தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால் பாதுகாப்பிற்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |