நெல்லையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் சுகன்யா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இந்நிலையில் சுகன்யாவிற்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் அவர் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து சுகன்யாவிற்கு திருமணம் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுகன்யா வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு கழிப்பறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.