வலிப்பு வந்து தவித்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு உதவாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
கனடாவில் உள்ள ஹாக்கி கிளப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் வலிப்பு வந்து தவித்துக் கொண்டிருந்தான். அவனை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் அவனுக்கு உதவாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அவன் மீது தண்ணீரை ஊற்றி காணொளி பதிவு செய்து வேடிக்கை செய்து கொண்டிருந்தனர். அதுமட்டுமன்றி அவர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவும் இல்லை முகக்கவசம் அணியவில்லை. அந்த காணொளியை பார்த்த மருத்துவர் ஒருவர் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க கூட வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கூறுகையில் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகும் வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்கரி ஜூனியர் ஹாக்கி அணியை சேர்ந்த இளைஞர்களே இத்தகைய கொடும் செயலை செய்ததாக கூறப்படும் நிலையில் அணியின் எக்ஸிக்யூட்டிவ் இயக்குனரான கெவின் என்பவர் கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட சிறுவனின் பெயரும் அவரது தந்தையின் பெயரும் வெளியாகவில்லை.