விஜய் டிவி பிரபலம் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி பிரபலங்கள் இடம்பெறும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/pugazh_iam/status/1419303131196772352
அதில் பேசிய புகழ் ‘உங்களுடைய ஆதரவினால் எனக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக விரைவில் கலந்து கொள்வேன். இது ஒரு சின்ன இடைவெளி தான். படம் முடிந்தவுடன் சீக்கிரமாகவே சந்திக்கிறேன். கண்டிப்பாக ‘வலிமை’யுடன் வந்து உங்களை மீட் பண்றேன்’ என கூறியுள்ளார். தற்போது புகழ் அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி, விஜய் சேதுபதியின் 46-வது படம், காசேதான் கடவுளடா ரீமேக் உள்பட ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.