விஜய் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதையும் விரைவில் எடுத்து முடிக்க படக்குழு தயாராகி வருகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்தியா முதல் இங்கிலாந்து வரை ரசிகர்கள் தெறிக்க விட்டனர். இப்படத்தின் பஸ்ட் லுக் உடனுக்குடன், தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டரையும் இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாகவும், சண்டைக் காட்சிகள் முடிந்தால் படம் ரிலீசுக்கு தயாராகி விடும் எனவும் கூறப்படுகின்றது.