கோவையில் நடிகர் அஜித்குமார் நடித்த “வலிமை” திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவம் நடந்த அன்று அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளாக வெளியானது. திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கூடியிருந்தனர். பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வலிமை படத்தின் முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைக்காததால் அஜித் ரசிகர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதாவது கோவையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான மணிகண்டன் என்ற அஜித் ரசிகரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது. டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்ததாலேயே தன்னால் டிக்கெட் பெற முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.