இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வலிமை படத்தின் பாடல்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் அஜித்தின் பிறந்த நாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வலிமை படத்தின் பாடல்கள் குறித்த புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் இந்த படத்தில் ஒரு அம்மா சென்டிமென்ட் பாடல் இருப்பதாகவும், இந்த படத்தின் துவக்க பாடல் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.