அஜித் ரசிகர்கள் எது நடக்கக் கூடாது என்று பயந்து இருந்தார்களோ அது தற்போது நடந்திருக்கின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள்தான் அனைவரிடமும் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ரசிகர்கள் எதற்காக பயந்து வந்தார்களோ அது தற்போது நடந்துள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீஸானாவுடனே தமிழ் ராக்கர்ஸ் எப்படியாவது படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்து விடுகிறது. மக்கள் சில பெயரும் காசு குறைகிறது என்ற எண்ணத்தால் இணையத்தில் பதிவு செய்து பார்த்து விடுகின்றனர். இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகின்றது. இறுதியில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுகிறார்கள். தமிழ் ராக்கர்ஸில் வேலை செய்பவர்களை சிறையில் போட வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.