வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இன்று தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்பட இருப்பதாகவும், அரசு சிமெண்ட் என்ற பெயருடன் வலிமை என்ற பெயர் கொண்ட புதிய சிமென்ட் உருவாகும் என்றும், இந்த ஆண்டே வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.