Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை கூட போட்டியா….? நமக்கு வசூல் இருக்காது…. முடிவை மாற்றிய 400 கோடி பட்ஜெட் படக்குழு….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. எனவே தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் வலிமை திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை திரைப்படம் வெளியாகும் சமயத்தில் தங்களின் படங்களை வெளியிட பல சினிமா பிரமுகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழி நடிகர்களும் இணைந்து நடித்திருக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை வலிமையுடன் போட்டியாக வெளியிட படக்குழுவினர் தயங்குகின்றனர்.

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் படம் வெற்றி பெற வேண்டும் என்பதே ராஜமௌளியின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் வலிமை வெளியாகும் சமயத்தில் தமிழகத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானால் எதிர்பார்த்த வெற்றியையும் வசூலையும் பெற முடியாது என படக்குழு நினைக்கின்றது. எனவே வலிமை படம் வெளியாவதற்கு முன்பாகவே ஆர் ஆர் ஆர் படத்தை திரைக்கு கொண்டுவர யோசித்து வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |