Categories
மாநில செய்திகள்

வலிமை சிமெண்ட்: வாங்குவது எப்படி?…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பு ஆண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வலிமை சிமெண்ட்டை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலமாக வெளிச்சந்தையில் இவற்றின் விலை குறையும். மிகக் குறைந்த விலையில் அதிக தரத்துடன் மக்கள் சிமெண்ட் வாங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் வலிமை சிமெண்ட் 360 ரூபாய், 365 ரூபாய் என இரண்டு ரகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக பெறுவர், ஆன்லைனில் பதிவு செய்து 216 ரூபாய் விலையில் 750 மூட்டைகள் வரை வாங்கிக் கொள்ளலாம மேலும் வீடு கட்டுமான பணிக்காக தான்சிமெண்ட் மூட்டைகள் வாங்குகிறேன் என கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றிதழ் பெற்று ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |