திமுக அரசு வலிமை சிமெண்டை அறிமுகம் செய்தது தொடர்ந்து தற்போது RRR என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை கடந்த 12ஆம் தேதி காணொளி வாயிலாக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஆகியோர் அதனை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் கொரோனா தொற்று, வெள்ளம் என்று இதிலேயே பகுதி நாட்கள் சென்று விட்டது.
தற்போது அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. திமுக ஓர் ஆண்டு ஆட்சியை அதிமுக புகழவா செய்வார்கள்? என்று கிண்டலாகப் பேசிய துரைமுருகன் அவர்கள் எதிர்க்கட்சிகள் என்பதால் விமர்சனம் செய்யத் தான் பார்ப்பார்கள். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றதா? என்று கேள்வி இருக்கிறது. தொடர்ந்து திமுக அந்த பணிகளை செய்து வருகிறது. ஏரிகளை வாருவதற்கு என “RRR” என்ற திட்டம் இருப்பதாகவும், அதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் ஐந்து ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.