Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை டீசர், பாடல் – வாவ் டபுள் ஹேப்பி நியூஸ்…!!!

எச்.வினோத் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அஜித்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மோஷன் போஸ்ட் ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களை கடந்தது.

இந்நிலையில் வலிமை படத்தின் டீசரும், முதல் பாடலும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் டீசர் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாகும் என்றும், பாடல் அதற்கு சில நாட்களுக்கு முன் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |