Categories
சினிமா

வலிமை திரைப்படம்…. தல போட்ட மரண மாஸ் கண்டிஷன்…. என்ன தெரியுமா…??

வலிமை திரைப்படம் உருவாவதற்கு முன்பே அஜித் போட்ட சில கண்டிஷன்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் நேர்கொண்டபார்வை என்ற வெற்றிப்படம் வெளியாகி இருந்தது. தற்போது வலிமை திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியிடபட உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தல அஜித்தின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தல அஜித் தற்போது போலீஸ் கதாபாத்திரங்களையே விரும்பி நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

அதேபோல் இந்த திரைப்படமும் போலீஸ் கதாபாத்திரத்தை தான் முன்னணியாக கொண்டுள்ளது. வேலும் அஜித் இந்த படத்திற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே வினோத்திடம் சில கண்டிஷன்களை கூறியுள்ளார். அதன் பிறகு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. அது என்ன கண்டிஷன் என்றால், போலீசாரை இழிவுபடுத்துவது குறித்த காட்சிகளோ, அல்லது தனி நபரையோ அரசியல்வாதிகளையும் அரசியல் சம்பந்தப்பட்ட இழிவான காட்சிகளையோ வைக்கக் கூடாது என்பதாகும். சினிமா வாழ்க்கையை கெடுக்கும் வகையில் அமையும் என இவ்வாறு செய்துள்ளார்.

Categories

Tech |