Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

வலிமை படத்தில் அஜித் பேசிய பஞ்ச் வசனங்கள்…. யாருக்கோ மறைமுகமாக பதிலடி கொடுக்கிறாரப்பா….!!!

வலிமை படத்தில் அஜித் குமார் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த திரைப்படமான வலிமை கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றது. இத்திரைப்படமானது கடந்த பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ரிலீஸ் தள்ளிபோனது. இந்நிலையில் இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகியது. அதனால் ரசிகர்கள் வலிமை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையில் உள்ளவர்களும் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்து, படம் மாஸாக உள்ளது. அஜித் மாஸ் காட்டியுள்ளார் என பல வகையில் பாராட்டி வருகின்றவர்கள் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் படம் மிக நீளமாக ஓடுகின்றது, இதனால் சில பின்னடைவுகளை சந்திக்கலாம் என கூறுகின்றனர்.

தீரன், சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் சுவாரஸ்யம் சற்று குறைவாகவே உள்ளது என கூறி வருகின்றனர். சிலர், அஜித் பஞ்ச் வசனங்களை தன் படங்களில் பேசுவார். இப்படத்தில் பேசிய பஞ்ச் வசனங்கள் அவரை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக அமைந்திருக்கின்றது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்‌. அந்த பஞ்ச் டயலாக் என்னவென்றால், எனக்கு எதிரியா இருக்க முயற்சி செய்யாதே. அது ரொம்ப கஷ்டம் மற்றவர்கள் நம்மீது கல்லை எறிந்து கொண்டே தான் இருப்பார்கள் அதை சேர்த்து கோட்டை கட்டினால் நிமிர்ந்து பார்ப்பார்கள் உள்ளிட்டவற்றை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக அமைந்திருக்கின்றது.

 

Categories

Tech |