Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்துடன் மோதும் ‘எதற்கும் துணிந்தவன்’?… வெளியான புதிய தகவல்…!!!

பொங்கலுக்கு வலிமை படத்துடன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை' படத்துடன் மோதும் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்'? | actor suriya etharkum  thuninthavan to be released in theaters with the fim ajith valimai |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News ...

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் வெளியாகியிருந்தது. தற்போது பொங்கலையொட்டி எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சூரி, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |