முதல்முறையாக பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹெச்.வினோத் ‘வலிமை’ படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக வலிமை படக்குழுவினரிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். இதையடுத்து சமீபத்தில் வலிமை படத்தின் போஸ்டர்கள், முதல் பாடல் ஆகியவை வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக இயக்குனர் ஹெச்.வினோத் பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் ‘நம் வீட்டில் அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ போலீஸாக இருந்தால் எப்படி இயல்பாக இருப்பார்களோ, அப்படி தான் வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இருக்கும். வலிமை படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் கிடையாது. ஹூமா குரேஷியும், அஜித்தும் நண்பர்களாகவே நடித்துள்ளனர். இந்த படத்தில் அஜித் போலீஸாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று கூறலாம். மேலும் வலிமை படம் பைக் ரேஸ் படம் அல்ல. ஆனால் மூன்று பெரிய பைக் சேஸிங் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். இந்த படம் மக்கள் பிரச்சினையை சொல்லும் படமாக இருக்கும்’ என கூறியுள்ளார். வலிமை அப்டேட்டுகாக ஏங்கிய ரசிகர்களுக்கு இயக்குனர் கூறிய இந்த தகவல் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.