Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை படம் குறித்து பேசிய ஸ்ரீநிதி….. “என்னை வீட்டில் வைத்து பூட்டி விட்டார்கள்”…. சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீநிதி….!!!!!

நடிகை ஸ்ரீநிதி வலிமை திரைப்படம் கருத்து பேசியது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி மூலம் நடிகை ஸ்ரீநிதி அறிமுகமானார். இவர் யாரடி நீ மோகினி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் வலிமை படம் பற்றி பகிர்ந்த வீடியோவானது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இவரின் வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்தார்கள். மேலும் சமூக வளைதளத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக ஸ்ரீநிதி சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி அவரின் வீட்டின் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் அம்மா ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதால் இப்படி எல்லாம் செய்கின்றார். அதனால் அவரை யாரும் திட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஸ்ரீநிதி, சின்னத்திரை நடிகை நட்சத்திராவின் திருமணம் பற்றி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீநிதி சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்திருக்கும் சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை பெற்று வருவதாக அவரின் நட்பு வட்டாரங்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீநிதி இணையத்தில் தற்போது வெளியிட்ட வீடியோவில் வலிமை படத்தை பற்றி விமர்சனம் செய்தாய் என்றால் அது ஒரு படம் அதை விமர்சனம் செய்ய யாருக்கு வேண்டாமானாலும் உரிமை இருக்கிறது. இப்போது கேட்டால் கூட வலிமை சுமாரான படம் என்றுதான் சொல்லுவேன். அது எனக்கு பிடித்த படம் இல்லை என்றாலும் இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு பாடம் தான் என தெரிவித்திருக்கிறார். இப்போது என்ன வலிமை பற்றி பேசுகிறீர்கள்? என்று கேட்ட பொழுது என்னை வீட்டில் வைத்து பூட்டி விட்டார்கள். தனிமையில் இருக்கின்றேன் என்ன செய்ய என கேட்டுள்ளார்.

Categories

Tech |