வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக சித்தரித்து அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி என்பவர் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் தவறு செய்வது போல் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.