போனி கபூர் வெளியிட்ட வலிமை பட அப்டேட்டால் ரசிகர்கள் இணையத்தில் கதறியுள்ளார்கள்.
அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை படம் வெளியாகவுள்ளது. இதனை போனிகபூர் தயாரித்துள்ள நிலையில் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா நடித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு போனிகபூர் பல அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளையும், பாடல்களையும் ப்ரோமோவாக வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் தங்களுக்கு வலிமை பட அப்டேட்டே வேண்டாம் என்று இணையத்தில் கதறியுள்ளார்கள். மேலும் தாங்கள் வலிமை படத்தை தியேட்டரில் சென்றே பார்த்துக்கொள்கிறோம் என்றும் ரசிகர்கள் போனி கபூரை கலாய்த்துள்ளார்கள்.