ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் டீசர் நாளை வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஜீத் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #ValimaiGlimpse-cant wait for Tomorow என்று அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் டிரெண்ட் செய்து வருகின்றனர்
இந்நிலையில் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.