Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வலிமை பட வில்லனுக்கு கேரளாவில் டும் டும் டும்”… குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!

வலிமை பட வில்லனுடன் இணைந்து நடித்த துருவனுக்கு கேரளாவில் திருமணம் நடந்துள்ளது.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் அளவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்த கார்த்திக்கேயனுடன் இணைந்து துருவன் நடித்திருந்தார். துருவன் நீண்ட நாட்களாக அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பாலகாட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் அஞ்சலியை துருவன் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர். திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை துருவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இப்புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |