அஜித்குமாரின் வலிமை மற்றும் விஜயின் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் தமிழில் நன்றாக ஓடி வசூலில் சாதனை படைத்துள்ளதாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த திரைப்படம் வலிமை. இந்த படம் விடுமுறை காலத்தில் வெளியிட்டாலும் பைக் ரேஸ் போன்ற சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் 200 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்ததாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 13ஆம் தேதி நான்கு நாள் விடுமுறை இருந்த நிலையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். விஜய் நடித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கியிருந்தார். முதல் நாளே இந்த படத்தின் விமர்சனம் நெகட்டிவாக இருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாள் இப்படம் சில தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு கேஜிஎஃப் இரண்டாம் பாகம் திரையிடப்பட்டது. இதனால் பட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வலிமை, பீஸ்ட் இரண்டும் பெஸ்ட்டுதான் என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவரின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என இணையதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.