Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை மாஸ் அப்டேட்… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

எச்.வினோத்இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை நேர்காணல் ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அதில் வலிமை நிச்சயமாக அஜித் ரசிகர்களையும், சினிமா காதலர்களையும் திருப்திப்படுத்தும். கடினமான அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பிய ஒரு பவர் பேக் குடும்பப் படமாக இருக்கும் என்றார்.

மேலும் அஜித் பிறந்தநாளில் வலிமை பஸ்ட் லூக் அல்லது மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் எப்போது வலிமை படத்தின் அப்டேட் கிடைக்கும் என்று மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |