Categories
சினிமா

வலிமை ரிலீஸ் ஆகாததால் இத்தனை படங்களுக்கு வாய்ப்பா….? அதுவும் இவர் படம் கூட லிஸ்ட்ல இருக்கா….??

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கலுக்கு வெளியாகவிருந்த பெரிய படங்கள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகளினால் தள்ளிப்போனது.அஜித் நடிப்பில் உருவான வலிமை, ராஜமௌலி இயக்கத்தில் RRR, மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறு பட்ஜெட் படங்கள் பல பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. சதிஷ் முதன் முதலில் நாயகனாக நடிக்கும் நாய் சேகர், அஸ்வின் குமார் நடிப்பில் உருவான என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.

அதன் வரிசையில் தற்போது மற்றுமொரு நடிகரின் படமும் இணைந்துள்ளது. சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கொம்புவச்ச சிங்கம்டா வரும் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் வெளிவர உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |