Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர்…. மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கண்ணூர்பட்டியில் கல்யாண சுந்தரம்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த ஒரு மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கல்யாண சுந்தரம் மனமுடைந்து கடந்த 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையிலும் சிகிச்சை பலனின்றி கல்யாண சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து புதுசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |